வாழ்க்கையில் எது முக்கியம்?

நான் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் நிறுவனத்தில் ஒருவரை “close friend” என்று சொல்வேன். ஆனால் உண்மையில் அவர் என் மேனேஜர்.

ஒரு நாள் சனிக்கிழமை வேலை சீக்கிரம் முடிந்ததும், “திருப்பலிக்கேணி பார்த்தசாரதி கோவில் போவோமா?” என்று கேட்டார்.

அவர் ஜனவரியில் பதவி உயர்வு பெற்றிருந்தார். மேலும் அவரை ஆன்-சைட்டிற்கும் அனுப்பப் போகிறார்கள். அதற்காக ஒரு ட்ரீட் மாதிரி, “சும்மா கோவிலுக்கு போயிட்டு வரலாம்” என்றார்.

கோவிலில் தரிசனம் செய்து, அங்கிருந்து நடந்து கடற்கரைக்கும் போனோம்.

ஆனால் அவர் முகத்தில் சந்தோஷம் இல்லை. மிகவும் சோகமாக இருந்தார். வயது நாற்பதுக்கு மேல்.

“ஏன் சார் இவ்வளவு சோகமாக இருக்கீங்க?” என்று கேட்டேன்.

அவர் மெதுவாக சொன்னார்:

“நான் Chennai வேலை தேடி வந்த காலம் நினைவுக்கு வருகிறது. அப்போது ஒவ்வொரு வாரமும் வீட்டுக்கு போக முடியாது. மாதத்திற்கு ஒரு தடவை தான் போவோம். சில சமயம் வேலை கிடைக்காது. வீட்டுக்கு போய் பணம் வாங்கி வருவோம். சாப்பாட்டுக்கு ஸ்நாக்ஸ் எடுத்து வருவோம்.

அப்போ நம்ம எதையும் எதிர்பார்க்காமல் அப்பா அம்மா எல்லாம் செய்து கொடுத்தாங்க.

அப்போ எல்லாம் பொங்கல், தீபாவளி வந்தாலே சொந்த ஊருக்கு போவேன். அங்கே எல்லாரும் “என்ன தம்பி, இன்னும் வேலை கிடைக்கலையா?” என்று கேட்பார்கள்.
அது எனக்கு ரொம்ப கஷ்டமாகவும், ஒரு குற்ற உணர்ச்சியாகவும் இருக்கும்.

Mobile Recharge முதல் Room Rent வரை எல்லாம் அப்பா தான் பணம் அனுப்புவார். ஒரு வருடத்துக்கு பிறகு வேலை கிடைத்தது. அதன் பிறகு அவர்கள் தான் இரண்டு மூன்று தடவை வந்து பார்க்க முயற்சிப்பார்கள். ஒரு நாள், இரண்டு நாள் தங்கி போவார்கள். ஆனா அவர்களுக்கு இங்க செட் ஆகாது. அவர்களுக்கு சொந்த ஊர் தான் பிடிக்கும்.

நான் வேலை வேலை என்று ஓடிக்கொண்டே இருந்தேன். சம்பாதிக்க ஆரம்பித்ததும் அப்பா ஏதாவது function போகணும், கோவில் போகணும் என்றால் நான் மறந்து விடுவேன். சில நேரம் ஆபீஸ் நேரத்தில் போன் எடுக்க மாட்டேன்.

இரவு call பண்ணி கேட்டால், ‘நாங்க போயிட்டு வந்தோம்’ என்று சொல்வார்கள்.

சில சமயம் ‘வீட்டில் பணம் இல்லை, உறவினரிடம் வாங்கி போனேன்’ என்று சொன்னால் நான் கோபப்பட்டு,
‘ஏன் என்னிடம் கேட்கல? நான் தான் மாதம் பணம் அனுப்புறேனே!’ என்று சத்தம் போடுவேன்.

ஒரு நாள் அம்மா அழைத்து,
“அப்பாவுக்கு உடம்பு சரியில்லை, weekend வா” என்றார்.

ஆனால் நான் வேலைதான் முக்கியம் என்று நினைத்தேன்.
Promotion, onsite கனவுகளிலேயே இருந்தேன்.
அவர்களை ஒரு நல்ல மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று கூட மனதில் தோன்றவில்லை.

பணம் மட்டும் அனுப்பினேன்…
ஆனால் என்னுடைய நேரத்தை கொடுக்கவில்லை.

ஒரு நாள் பக்கத்து வீட்டார் call பண்ணி, ‘உன் அம்மா பேசணும்’ என்றார்கள்.
அம்மா அழுத குரலில், ‘அப்பா கீழே விழுந்துட்டாரு, சீக்கிரம் வா’ என்றார்.

நான் leave கேட்டேன்.
‘இன்று Thursday… Friday முடிச்சு Monday leave எடு’ என்றார்கள் Manager.

வெள்ளிக்கிழமை வேலை முடித்து ரயில் ஏறும்போது call வந்தது —
“அப்பா இல்லை…”

வீட்டுக்கு போனபோது தெருவில் எல்லோரும் நின்று,
“என்ன தம்பி… வேலை வேலைன்னு இருந்தே…” என்று பேசினார்கள்.

அதற்குப் பிறகு அம்மா மட்டும் என்னுடன் சென்னை வந்தார்.
ஆனால் அவருக்கு இங்கு பிடிக்கவில்லை.
“அப்பா இருந்த வீடு தான் என் இடம்” என்றார்.

நான் காலை 7.30க்கு வேலைக்கு போய்விடுவேன்.
சில நேரம் காரணமே தெரியாமல் அம்மாவிடம் கோபப்படுவேன்.
சாப்பாடு இல்லை, dress wash பண்ணல என்று சின்ன விஷயங்களுக்கு சண்டை போடுவேன்.

மாலை 9.30க்கு தான் வீட்டுக்கு வருவேன்.
அம்மா டிவி பார்த்துக் கொண்டே இருப்பார்.
நான் நண்பர்களுடன் சாப்பிட்டு வந்துவிடுவேன்.

எனக்கு புரியவில்லை —
நான் ஏன் இப்படி கோபப்படுகிறேன்?
நான் ஏன் என்னை வளர்த்தவர்களையே கஷ்டப்படுத்தினேன்?

சில மாதங்கள் ஆன்-சைட் வேலைக்காக Hyderabad சென்றிருந்தேன்.
அம்மாவை மீண்டும் சொந்த ஊருக்கு அனுப்பிவிட்டேன்.

நான் அங்கே நண்பர்களுடன் நேரம் கழித்து சிரித்துக் கொண்டிருந்தபோது…
அம்மா மட்டும் தனிமையில் இருந்தார்.

இப்போது திரும்பிப் பார்க்கும்போது தான் புரிகிறது…

நம்மை கஷ்டப்பட்டு படிக்க வைத்தவர்கள்…
வேலை தேடிய போது பணம் கொடுத்தவர்கள்…
Mobile வாங்கி கொடுத்தவர்கள்…
Bike வாங்கி கொடுத்தவர்கள்…
Petrol பணம் கொடுத்தவர்கள்…
நாம் எப்போ வீட்டுக்கு வந்தாலும் சாப்பாடு வைத்து காத்திருந்தவர்கள்…

ஒரு நாள் கூட தாமதமாக வந்தாய் என்று கோபப்படாதவர்கள்…

ஆனால் நாம்?
நாம் யாருக்காகவோ ஓடிக்கொண்டே இருக்கிறோம்…
வீட்டில் இருப்பவர்களின் மதிப்பை கொடுக்க மறந்துவிடுகிறோம்…

இப்போது வேலை இருக்கிறது. பணம் இருக்கிறது.
ஆனால் அதை அனுபவிக்க அப்பா அம்மா இல்லை…

இந்த வலி ஏன் என் வாழ்க்கையில் நடந்தது என தெரியவில்லை.
ஆனால் ஒரு விஷயம் மட்டும் புரிந்தது —

அம்மா அப்பா உயிரோடு இருக்கும் போது அவர்களுடன் செலவிடும் நேரம் தான் வாழ்க்கையின் மிகப்பெரிய செல்வம்.

#LifeLesson #ParentsLove #AmmaAppa #FamilyFirst
#ValueOfTime #Realization #EmotionalStory #TrueStoryHindi
#Ungalukkaga #NenjilOruKadhai #TamilStory
#TamilLife #TamilEmotional #TamilQuotes
#TamilMotivation #Anbudan #Valkai #Uravu #TimeIsPrecious
#RespectParents #DontMissMoments
#LifeReality #WorkLifeBalance #SuccessVsHappiness